உதாரணமாக மயக்க மருந்தினால் ஏற்படும் பாதிப்பு , வயிற்றை வெட்டி செய்யும் சத்திர சிகிச்சை என்பதால் தொற்றுக்கள் , இரத்தப் போக்குகள் என்பவை ஏற்படவும் சாத்தியம் உள்ளது.
ஆனால் இந்த பாதிப்புகள் மிகவும் குறைந்த முறையில் ஆண்களிலே மிகவும் இலகுவாக கருத்தடை சத்திர சிகிச்சை செய்யப் படலாம்.
ஆண்களிலே செய்யப்படும் கருத்தடை சத்திர சிகிச்சையானது Vasectomy எனப்படுகிறது.
பெண்களிலே நடைபெறும் சத்திர சிகிச்சையில் முட்டை கருப்பை நோக்கி நகரும் பலோப்பியன்(fallopian) குழாய் வெட்டித் தைக்கப்படும்.
ஆண்களிலே கூட அதற்கு நிகராக விந்துகள் பயணிக்கும் குழாயான Vas deferens எனப்படும் குழாய் வெட்டித்தைக்கப்படும்.
பெண்களிலே பலோப்பியன் குழாய் வயிற்றின் உள்ளே இருப்பதால் வயிற்றை வெட்டியே இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப் படவேண்டும்.
ஆனால் ஆண்களிலே இந்த குழாயானது விதைப்பையினுள் ஆரம்பித்து வயிற்றின் அடிப்ப்குதயின் ஊடாக ஆணுறுப்பை அடைந்து விந்துகளை வெளியேற்றும்.
இவ்வாறு இந்தக் குழாய் விதைப் பையினுள் இருப்பதால் இலகுவாக விதைப் பையில் சிறிய துளை போட்டு அந்தக் குழாய்களை வெட்டித் தைத்துவிடுவதன் மூலம் விந்துகள் வெளியேறுவது தடைப்பட்டு கர்ப்பம் உருவாகுவது தடைப்படும்.
இதற்காக எந்த மயக்க மருந்துகளும் தேவை இல்லை , சத்திர சிகிச்சை கூடமும் தேவை இல்லை.
வெறுமனே வெட்டப்படும் இடத்தை மட்டும் விறைக்கச் செய்யும் மருந்துகளை பாவித்து சத்திர சிகிச்சை கூடம் இல்லாத வைத்திய சாலைகளில் கூட இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப் படலாம்.
இதற்காக வெட்டப் படும் துளையும் மிகவும் சிறிய(ஒரு சில cm) காயமே.
இந்த சத்திர சிகிச்சை செய்த பின்பு தடைப்படுவது விந்துகளின் வெளியேற்றம் மட்டுமே . ஆனால் ஒரு ஆண் உறவில் ஈடுபடும் போது வெளிவரும் சுக்கிலப் பாயத்தில் இருக்கும் ஏனைய திரவங்கள் வழமை போல் வெளிவருவதால் அந்த ஆணின் ஆண்மையிலோ அல்லது, உடலுறவின் மீதான ஆர்வத்திலோ எந்த விதமான மாற்றமும் ஏற்படாது.
இந்தச் சத்திர சிகிச்சை செய்து கொள்ளுவதால் ஆண்மை குறையும் என்ற மூட நம்பிக்கையே ஆண்கள் கர்ப்பத்தடை செய்யாமல் பெண்கள் மட்டும் கர்ப்பத்தடை செய்து கொள்ளும் அவலம் எம் சமூகத்தில் இருப்பதற்கானகாரணமாகும்.
ஆண்களே கொஞ்சம் சிந்தியுங்கள் ! மிகவும் எளிமையாக எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் நீங்கள் கருத்தடை செய்யும் வசதி இருக்கும் போது என் உங்கள் மனைவியை மிகவும் சிக்கலான சத்திரசிகிச்சைக்கு உட் படுத்துகிறீர்கள்.
எவ்வளவு இலகுவாக இந்த சத்திர சிகிச்சை நடைபெறுகிறது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள் !
நன்றி : தமிழ் மருத்துவம்

ethuku neenga kottaya nasuki konnuralam
ReplyDelete