Sunday, September 19, 2010

சிறுநீர்ப் பதையில் தொற்று...



சிறுநீர்ப் பாதையில் பாதிப்புகள் ஏற்பட்டால் அவற்றுக்கான அறிகுறிகள் எளிதாகவே விளங்கிவிடும். திடீரென்று சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.

அதுவும் அப்போதே உடனடியாகக் கழித்துவிடவேண்டும் என்கிற உணர்வு. அப்படிச் சிறுநீர் கழிக்கும்போது, சிறுநீர் இறக்குக்குழாயில் குத்துவது போன்ற வலியோ எரிச்சலோ ஏற்படும். பெரும்பாலும் சிறதளவு சிறுநீர்தான் வெளிப்படும். அப்படி வெளிப்படும் சிறுநீரில், ரத்தமும் கலந்திருக்கலாம். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வோடு, கீழ்வயிற்றுப் பகுதியில் ஒருவித வலியும் ஏற்படக்கூடும்.சிலர் அவர்களது வழக்கத்துகு மாறாக, பகலிலேயே ஆறுமுறைக்கு மேல் சிறுநீர் கழித்தால் அவர்களது சிறுநீர்ப் பையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை மருத்துவ ஆலோசனையின் மூலம் தெரிந்துகொள்வது நல்லது.

சிறுநீர் இறக்குக் குழாய் வழியாக பாக்டீரியா உள்ளே புகுந்து, அவை சிறுநீரகங்களையும் அடைந்தால் அப்போது காய்ச்சல், குமட்டல், முதுகுவலி, வாந்தி போன்ற அறிகுறிகளும் கூடுதலாக ஏற்படும்.சிறுநீர்ப் பாதையில் எப்படித் தொற்றுநோய்கள் உண்டாகக் கூடும்? எல்லாம் பாக்டீரியாவின் கைங்கர்யம்தான். அவை வெளியிலிருந்து நம் உடலுக்குள் செல்வதால்தான் இந்தப் பிரச்னை.பலவிதங்களில் பாக்டீரியா உள்ளே செல்லமுடியும். என்றாலும் சிறுநீர்ப்பாதை பாதிப்புகளுக்குக் காரணமாகும் பாக்டீரியா, உடலின் கீழ்ப்புறமாகத்தான் உள்ளே செல்கிறது. அதுவும் பெண்களுக்கு, அவர்களது பிறப்புறுப்பின்  வழியாக இவை உள்ளே செல்ல வாய்ப்பு உண்டு. அல்லது ஆசனவாய் வழியாகவும் உள்ளே செல்லக்கூடும். இப்படி நுழையும் பாக்டீரியா, சிறுநிர் இறக்குக்குழாயை அடைகிறது. பிறகு மேல்பக்கமாகத் தன் பயணத்தைத் தொடர்ந்து சிறுநீர்ப் பையில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. 

போகிறபோக்கில் சிறுநீர்ப் பாதையின் மீதிப் பகுதிகளையும் இந்த பாக்டீரிய 'ஆசிர்வதித்து' பாதிப்புகளை உண்டாக்கலாம்.'புயலுக்குப்பின் அமைதி, இன்பத்துக்குப் பின் துன்பம்' என்றெல்லாம் பழமொழிகளை உண்டாக்கியவர்கள், சிறுநீர்ப் பாதை குறித்தும் யோசித்திருப்பார்களா என்பது தெரியாது. ஆனால் இதற்கும் ஒரு விதத்தில் அது பொருந்துகிறது.

உடலுறவு என்ற மகிழ்வூட்டும் செயலின் போதே உடலுக்குச் சில வேண்டாத தொந்தரவுகளும் ஏற்படலாம். முக்கியமாகப் பெண்களுக்கு. சில பாக்டீரியா எப்படியோ பெண்ணுறுப்பில் வந்து தங்கிவிடும். உடலுக்குள் மேலும் நுழையவேண்டும் என்கிற தீர்மானம் அதற்கு  இருந்திருக்காது. 


ஆனால் உடலுறவின் போது ஆண் உறுப்பு அந்தப் பாக்டீரியாவை மேலும் மேலும் என்றபடி உள்ளே செல்கின்றன. பிறகு மேலே கூறிய வகையில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.ஒழுக்கநெறி, எய்ட்ஸ் போன்ற கோணங்களில் மட்டுமல்ல, சிறுநீர்ப் பாதையில் தொந்தரவுகள் ஏற்படாமல் இருக்கவும் ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆணுடன் உடலுறவு கொள்ளாதிருப்பது நல்லது. காரணம், இப்படிப்பட்ட பெண்களின் சிறுநீர்ப்பை, அதிக அளவில் தொற்றுக் கிருமிகளால் பாதிக்கப்படுகின்றன என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.நம் ஊர் பொதுக்கழிப்பறைகளைப் பற்றி நமக்குத் தெரியும். நீண்ட தூரப் பேருந்துப் பயணம் செல்பவர்கள் நடுவில் ஏதாவது நிறுத்தத்தில் வண்டி நிற்கும்போது, சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டிருந்தாலும், அதை வெளியேற்றாமல் அடக்கிக்கொள்ளத்தான் முயற்சிப்பார்கள். பொதுக் கழிப்பிடம் என்னும் நரகத்துக்குச் சில நிமிடங்கள் விசிட் செய்வதை அவர்கள் விரும்புவதில்லை.ஆண்களாவது பரவாயில்லை. எப்படியோ சமாளித்துக் கொள்வார்கள். ஆனால் பெண்களின் பாடுதான் திண்ணடாட்டம். கழிவறைக்குச் செல்லவும் பிடிக்காமல், மறைவிடம் ஓடி ஒதுங்கவும் முடியாமல் சிறுநீரை அடக்கிக் கொள்கிறார்கள்.ஆனால் இது எவ்வளவு தப்பு தெரியுமா?சிறுநீர்ப்பை என்பது ஒரு எலாஸ்டிக் தன்மை கொண்ட தசை, அதில் சிறுநீர் அதிகளவில் தங்கும்போது, அந்தத் தசை விரிகிறது. சிறுநீர் வெளியேற்றப்பட்டவுடன் அந்தத் தசை சுருங்கிவிடும்.சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்ட பிறகும் வெகுநேரம் சிறுநீர் கழிக்கவில்லை என்றால் சிறுநீர்ப்பைக்குத்தான் மிகுந்த சிரமம். எவ்வளவு நேரம்தான் பாரத்தைச் சுமப்பது? தவிர, அந்தப் பாரம் மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டிருக்கவும் வாய்ப்புண்டு. இப்படிச் சுமையால் தள்ளாடும் சிறுநீர்ப் பையின் தசை, நாளடைவில் பலவீனமடையும். அதாவது அதன் எலாஸ்டிக் தன்மை குறையும். 'அப்பாடி, வீடு வந்துவிட்டது' என்றபடி வெகுநேரம் கழித்து டாய்லெட்டிற்குள் நுழையும்போது, சிறுநீர்ப்பை தன்னிடமுள்ள மொத்தச் சிறுநீரையும் வெளியேற்றாமல் கொஞ்சம் சிறுநீரை மிச்சப்படுத்தி வைத்துக் கொள்கிறது. இதற்குக் காரணம், அதன் தளர்ந்துபோன தன்மைதான்.வீட்டுக்கு வெளியே தண்ணீர் தேங்கினால் கொசு வரும் என்பது நமக்குத் தெரியும். வீட்டுக்கு வெளியில்தான் என்றில்லை. 

எந்த இடத்திலுமே தேங்குவது என்பது வேண்டாத விளைவுகளைத்தான் கொண்டு வரும். மொத்த சேமிப்பையும் வெளியேற்றாமல் இருப்பதால், தொடர்ந்து சிறுநீர்ப்பையில் தங்கும் சிறுநீர் காரணமாகவே சிறுநீர்ப் பாதையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அதிகமாக வாய்ப்பு உண்டு.தவிர, பெண்களுக்கென்றே இறைவன் அளித்த வரங்கள் அல்லது அவஸ்தைகள் என்று சில உண்டே! கருத்தரித்தல், மாதவிலக்கு போன்றவை. 
இவற்றின் காரணமாகவும் சிறுநீர்ப் பாதையில் பாதிப்புகள் ஏற்படலாம்.சிறுநீர்ப் பாதையில் தொற்றுக்கிருமிகள் பரவியதை எப்படிக் கண்டுபிடிப்பது? சம்பந்தப்பட்டவரிடமிருந்து பெறப்பட்ட சிறுநீரை, நுண்ணோக்கியில் வைத்து பரிசோதிப்பதன் மூலம் அல்லது 'கல்ச்சர்'  சோதனை மூலம் கண்டறியலாம். அதாவது பாக்டீரியா நன்கு செழித்து வளரக்கூடிய ஒரு பொருளைச் சிறுநீரில் கலப்பார்கள்.அவை வேகமாகச் செழித்து வளர்ந்தால் (இந்த நிலையில் அவற்றைக் கண்டுபிடிப்பது எளிது) பாக்டீரியா இருப்பதைக் கண்டுணர்ந்து அவையே சிறுநீரகப் பாதிப்புகளுக்குக் காரணம் என்பதையும் அறிந்து சிகிச்சை அளிப்பார்கள்.என்ன மாதிரி சிகிச்சையளிப்பார்கள் என்தையும் ஓரளவு அறிந்துகொள்வதில் தப்பில்லை. ஆன்டிபயாடிக்குகள்தான் பொதுவாக அளிக்கப்படும். சுமார் பத்து நாட்களில் இவை பாக்டீரியாவுடன் போரிட்டு அவற்றை விரட்டியடிக்கும். ஆனால் இந்தச் சமயத்தில் நோயாளி அதிகப் பிரசங்கித் தனத்தில் ஈடுபடக்கூடாது. ஒருவாரம் அல்லது 10 நாட்களுக்கென்று டாக்டர் மாத்திரை எழுதிக் கொடுத்திருப்பார். அதை உட்கொள்ளத் தொடங்கிய 2 நாட்களிலேயே குணமாகி விட்டதுபோல் நோயாளி உணர்வார்.அதாவது சிறுநீர்ப் பாதையில் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் அடங்கிவிடும். முழுமையாகச் சிறுநீர் வெளியாகலாம். உடனே, எதற்காக இனிமேலும் இந்த மாத்திரைகள் என்று தானாக முடிவெடுத்து அநாவசியச் சிக்கன நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. அது பாக்டீரியா பதுங்கும் நேரம். 


மேலும் சில நாட்கள் போரிட்டு அவை இறந்தபிறகுதான், சிறுநீர்ப் பாதை முழுமையாக நலமடையும்.இப்படி நலமாக உணர்ந்த ஒருவாரத்துக்குப் பிறகு இன்னும் ஒருமுறை சிறுநீர்ப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியிருக்கலாம். வேறென்ன, பாக்டீரியாக்களின் கொட்டம் முழுதும் அடங்கிவிட்டதை உறுதி செய்து கொள்ளத்தான்.எதற்கு இந்த அவஸ்தைகள் எல்லாம்? இதெல்லாம் வருவதற்கு முன்பே தடை செய்துவிடலாமே என்கிறீர்களா? சபாஷ். இது சரியான சிந்தனை.பெரும்பாலும் உடலின் கீழ்ப்பகுதியில் உள்ள துவாரங்கள் வழியாகத்தான் பாக்டீரியா உள்ளே சென்று சிறுநீர்ப் பாதையில் பாதிப்பு ஏற்படுத்துகிறது என்பது உங்களுக்கு இப்போது தெரியும். ஆனால் அதற்காக அங்கெல்லாம் கதவுகளா போட்டுப் பூட்டமுடியும்? என்றாலும் வேறு சில நடைமுறைக்கேற்ற வழிகள் உண்டு.அதுவும் பெண்களுக்கு இது ரொம்ப முக்கியமானது. ஒன் அல்லது டூ பாத்ரூம் போனவுடன் அந்தப் பகுதிகளை நன்கு சுத்தம் செய்யுங்கள்.

அப்படிச் சுத்தம் செய்யும்போது, உங்கள் கை முன்புறத்திலிருந்து பின்புறம் மட்டுமே இயங்க வேண்டும். அதாவது மலம் மற்றும் சிறுநீரிலுள்ள பாக்டீரியா பிறப்புறப்பில் நுழைவதையோ தங்குவதையோ தவிர்க்கும் வழிமுறை இது. உடலுறவு கொள்வதற்கு முன்னும் பின்னும் பெண்ணுறுப்புப் பகுதியை நன்கு சுத்தம் செய்து கொள்வதன் மூலம் சிறுநீர்த் தொற்றுகளைக் கணிசமாகக் குறைக்க முடியும். தினமும் நிறைய குடியுங்கள். தண்ணீரைத்தான். வாஷ் பேஸினில் அழுக்குக் காணப்பட்டால் என்ன செய்வோம்? தண்ணீரை வேகமாக அங்கு பாய்ச்சுவோம். உடனே அந்த அழுக்கு அடித்துக்கொண்டு வெளியேறும் இல்லையா? அது போல தண்ணீர் உள்ளிட்ட திரவங்களை நிறைய அருந்தினால் அவை சிறுநீர்ப் பாதையில் உள்ள பாக்டீரியாவைத் தன்னுடன் இழுத்துக்கொண்டு வெளியேறும்.வைட்டமின் சி என்பது சிறுநீரின் கொஞ்சமான அமிலத் தன்மையை அதிகமாக்கும். இதன் காரணமாக உடலில் உள்ள பாதிப்பு ஏற்படுத்தும் பாக்டீரியாவின் எண்ணிக்கை குறையும். வைட்டமின் சி என்பது சிட்ரிக் அமிலம் கொண்ட எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் அதிகம் உள்ளது.பருத்தியினாலான உள்ளாடைகளை அணியுங்கள். மிகவும் இறுக்கமானதாக அது இருக்க வேண்டாம். 

அப்படி இறுக்கமாக இருந்தால் பாக்டீரியா பல்கிப் பெருகுவதற்கு அந்த ஈரப்பதம் வாய்ந்த சூழலே காரணமாக அமைந்துவிடக்கூடும்.உடலுறவுக்கு முன்னும் பின்னும் (ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்) சிறுநீர் கழிப்பது நல்லது. நுழையத் தொடங்கியிருக்கும் பாக்டீரியா இதன்மூலம் வெளியேற வாய்ப்புண்டு.உடலைச் சுத்தமாக வைத்திருங்கள். குளிக்கும்போது இடுப்புக்குக் கீழேயுள்ள பகுதிகளையும் நன்கு சுத்தம் செய்யுங்கள்.
இந்த இடத்தில் பெண்களுக்கு ஒரு கூடுதல் எச்சரிக்கை. பெண்ணுறுப்பை நீரால் நன்கு சுத்தம் செய்து கொள்வது நல்லது. 

ஆனால் சோப்பு, பெண்ணுறுப்புக்குள் சென்று விடாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் சோப்பில் உள்ள ரசாயனப் பொருள்கள் அங்கு சென்று எரிச்சலை ஏற்படுத்தலாம். அது வேறுமாதிரி பிரச்னைகளுக்கு வழி வகுக்கலாம்.சில குளித்துவிட்டு வந்ததும் ஈரத்துணியோடு வெகுநேரம் இருப்பார்கள். வேண்டாமே.

நன்றி : தினகரன்

Tuesday, July 27, 2010

Don't Avoid Breakfast..........It's very important

அவ‌னுக்கு வ‌ய‌து 22. மாநிற‌ம். வ‌ண்டியில் போகும்போது வீசும் எதிர்காற்றிலேயே ப‌ற‌ந்துவிடுவ‌து போன்ற‌ மெலிந்த‌ தேக‌ம். த‌னுஷை விட‌ ஒல்லி!. அதிர்ந்து பேச‌மாட்டான். மிக‌ அமைதியான‌வ‌ன்.

சொந்த‌ ஊர் என்ன‌வோ திருவ‌ண்ணாம‌லைதான். ஆனால் வ‌சிப்ப‌து வ‌றுமைக்கோட்டுக்கு கீழே‌. நோக்கியா, ஹுண்டாய் என‌ ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌ங்க‌ள் ஸ்ரீபெரும்புதூரை ஆண்டுகொண்டிருந்தாலும், அவ‌ற்றிற்கு அடிப‌ணியாம‌ல் இருக்கும் ஒரு குறுநில‌ ம‌ன்ன‌ரைப் போன்ற‌வ‌ர் அவ‌னுடைய‌ த‌ந்தை. தேர்ந்த‌ நெச‌வாளி. அவ‌ருக்கு உத‌வியாய் அவ‌ன‌து அம்மா. க‌ல்லூரி செல்லும் வ‌ய‌தில் ஒரு த‌ங்கை.

அவ‌னுடைய‌ த‌ந்தை என்ன‌மோ ஸ்ரீபெரும்புதூர் ஜாம்ப‌வான்க‌ளுக்கு அடிப‌ணியாத‌வ‌ர்தான். ஆனால் அவ‌ன் ப‌ணிந்துபோக‌ த‌யாராக‌யிருந்தான். வ‌றுமைக்கோடு. எப்பாடுப‌ட்டேனும் இந்த‌ கோட்டிலிருந்து வில‌கி த‌ன் குடும்ப‌த்தை ஒரு ந‌ல்ல‌ நிலைமைக்குக் கொண்டுவ‌ந்துவிட‌ வேண்டும் என்கிற‌ வெறி.

பெரும் முய‌ற்சிக்குப் பின்ன‌ர், சென்னையில் ஒரு ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தில் அவ‌னுக்கு வேலை கிடைத்த‌து. மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் ரூ.6000. திருவ‌ண்ணாம‌லையில் இருந்து தின‌மும் பேருந்தில் வ‌ந்து போக‌ முடியாது. ப‌ண‌ விர‌ய‌ம் ம‌ட்டும‌ல்லாம‌ல் ப‌ய‌ண‌த்தால் ஏற்ப‌டும் உட‌ற்க‌ளைப்பும் ஒரு கார‌ண‌ம். வேறு வ‌ழியில்லை. தாம்ப‌ர‌த்தில் உள்ள‌ உற‌வின‌ர் வீட்டில் தங்கி வேலைக்கு செல்வ‌து என‌ முடிவு செய்தான்.

பிற‌ந்த‌து முத‌ல், அதிக‌ப‌ட்ச‌ம் இர‌ண்டு நாட்க‌ளுக்கு மேல் த‌ன் பெற்றோரை பிரிந்த‌தில்லை அவ‌ன். ப‌ணியில் சேர்ந்த‌ பின் வார‌ம் ஒரு முறைதான் வீட்டுக்குப் போக‌ முடிந்த‌து. இந்த‌ பிரிவு அவ‌னை வ‌ருத்த‌ம‌டைய‌ச் செய்தாலும், த‌ன் குடும்ப‌ம் ந‌ல்ல‌ பொருளாதார‌ நிலைமைக்கு உய‌ர‌ இது அவ‌சிய‌ம் என்று க‌ருதி த‌ன்னைத் தானே தேற்றிக்கொண்டான்.

ப‌ண‌ம்..ப‌ண‌ம்..ப‌ண‌ம்..இது ஒன்றே முக்கிய‌ம். குடும்ப‌த்தின் வ‌றுமை ஒழிய‌ த‌ன் க‌வ‌ன‌ம் முழுதும் ப‌ண‌ம் ச‌ம்பாதிப்ப‌திலேயே இருக்க‌ வேண்டும் என்ப‌து அவ‌னுடைய‌ ல‌ட்சிய‌ம், வெறி, சித்தாந்த‌ம், கொள்கை, கோட்பாடு எல்லாமே. காலை 6:30 ம‌ணிக்கு அவ‌னுடைய‌ ஷிஃப்ட் துவ‌ங்கும். ஆறு ம‌ணிக்கு முன்னே அலுவ‌ல‌க‌த்துக்குச் சென்றுவிடுவான்.

அன்று திங்க‌ள் கிழ‌மை. ப‌னி வில‌காத‌ காலை நேர‌ம். ஆறாவ‌து த‌ள‌த்தில் உள்ள‌து அலுவ‌ல‌க‌ம். த‌ரைத் த‌ள‌த்தில் லிஃப்ட்டினுள் நுழைந்து 6ஐ அழுத்தினான். ஆறாம் த‌ள‌ம் சென்ற‌டைந்த‌வுட‌ன் லிஃப்ட் க‌த‌வு திற‌ந்த‌போது கீழே விழுந்த‌து அவ‌னுடைய‌ உயிர‌ற்ற‌ உட‌ல்!



அங்கிருந்த‌ செக்யூரிட்டிக‌ள் அவ‌னுடைய‌ டீமுக்கு த‌க‌வ‌ல் அளித்து அவ‌னை ம‌ருத்துவ‌ம‌னைக்குக் கொண்டு செல்ல‌ ஏற்பாடு செய்த‌ன‌ர். ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌ரிசோதித்த‌ ம‌ருத்துவ‌ர் ம‌றுநொடியே சொன்னார், "ஸாரி ஹி ஈஸ் நோ மோர்". 'டெட் ஆன் அரைவ‌ல்' என்று ரிப்போர்ட்டில் ப‌திவு செய்தார்.

பின்ன‌ர் அவ‌னுக்கு நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விசாரித்த‌போது தெரிய‌வ‌ந்த‌து. அவ‌னுக்கு புகை, குடி என்று எந்த‌ ப‌ழ‌க்க‌மும் இல்லை. ஒவ்வொரு மாத‌மும் அவ‌னுக்கென்று ரூ.1500 எடுத்துக்கொண்டு மீதி ப‌ண‌த்தை த‌ன் குடும்ப‌த்துக்கு அனுப்பிவிடுவான். அந்த‌ 1500ல் போக்குவ‌ர‌த்து, அலைபேசி, உண‌வு ஆகிய‌வ‌ற்றிற்கான‌ செல‌வுக‌ள் அட‌ங்கும். செல‌வைக் க‌ட்டுப்ப‌டுத்த‌ அவ‌ன் மேற்கொண்ட‌ ஒரு முடிவு..தினமும் காலை உண‌வைத் த‌விர்த்து ஒரு நாளைக்கு இரு வேளை ம‌ட்டுமே உண்ணுவ‌து.

இந்த‌ ப‌ழ‌க்க‌ம் வெகு நாட்க‌ளாய்த் தொட‌ர்ந்து உட‌லுக்குள் வாயு உருவாகி அது இத‌ய‌த்திற்குச் செல்லும் குழாயை பாதித்து......22 வ‌ய‌தில் மார‌டைப்பு! இது ஏதோ க‌ற்ப‌னையாக‌ எழுத‌ப்ப‌ட்ட‌ வ‌ரி அல்ல‌. அவ‌னுடைய‌ உண‌வு ப‌ழ‌க்க‌த்தை அவ‌ன் ந‌ண்ப‌ர்க‌ள் கூற‌க்கேட்டு அறிந்த‌ பின் ம‌ருத்துவ‌ர் சொன்ன‌து.

ப‌ண‌ம் ஒன்றையே பிராத‌ன‌மாக‌க் க‌ருதி ப‌ர‌ப‌ர‌வென‌ ப‌ற‌ந்துகொண்டிருக்கும் இந்த‌ யுக‌த்தில், ந‌ம்மில் பெரும்பாலானோர் காலை உண‌வைத் த‌விர்த்துவிடுகிறோம்/குறைத்துவிடுகிறோம். பெரும்பாலும் நாம் சொல்லும் கார‌ண‌ம்.."டைம் இல்ல‌". சாப்பிடுவ‌த‌ற்குக் கூட‌ நேர‌மில்லாம‌ல் அப்ப‌டி என்ன‌ கிழித்துவிட‌ப் போகிறோம்?

இத‌ற்கு மேல் இதைப்ப‌ற்றி நீங்க‌ளே சொல்லுங்க‌ள்!

பி.கு: நானும் இந்த‌ ம‌ட‌த்த‌ன‌மான‌ கார‌ண‌த்தைக் காட்டி ப‌ல‌ நாட்க‌ள் காலை உண‌வைத் த‌விர்த்திருக்கிறேன். அவ‌ன் ம‌ர‌ண‌ம்...என‌க்கொரு பாட‌ம். அன்றிலிருந்து என்னுடைய‌ காலை உண‌வு நேர‌ம் 10 அல்ல‌து 10:30க்குள்.

Thursday, June 17, 2010

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்...

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது : காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2. மிக அதிகமாகச் சாப்பிடுவது : இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல் : மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல் : நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று : மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும்.

6. தூக்கமின்மை : நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையானஅளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது : தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள்; சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது : உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது : மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது : அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

Source : electroflowers

Wednesday, June 16, 2010

மருத்துவ கருவிகள் - CT SCAN -

மருத்துவ கருவிகள்



மருத்துவ அறிவியல் சார்ந்த தொழில் நுட்பங்கள் பலவகையில் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் அது தொடர்பான ஒரு தொடர் பதிவை பதிவு செய்யலாம் என இருக்கிறேன்,

பல மருத்துவமனைகளில், ஆராய்ச்சி மையங்களில், கண்டறி நிலையங்களில்  (SCAN சென்டர்ஸ்),  " இங்கு CT ஸ்கேன் செய்யப்படும், MRI எடுக்கப்படும், ECG எடுக்கப்படும், XRAY வசதி உண்டு, BLOOD TEST செய்யப்படும்" என பல விளம்பரங்களை காணலாம்! இவை எல்லாம் என்ன? எதற்காக? என்ன வித்தியாசம்?

இவைகளை பற்றி சிறிதளவு தெரிந்து வைத்திருந்தால் அறிவுக்காக இல்லாமல் ஆபத்து காலங்களுக்காகவாவது உதவும். என்னால் முடிந்த அளவு எளிமையாக விளக்க முயற்சிக்கிறேன். சிறிதேனும் உதவியாக இருந்தால் மகிழ்ச்சி.

ஏதாவது விபத்து ஏற்பட்டாலோ, தவறி விழுந்தாலோ தற்போது மருத்துவர்கள் பரிந்துரை செய்வது CT SCAN மற்றும் MRI . இந்த இரண்டு கருவிகளும் உடலின் அனைத்து  பாகங்களையும் ஸ்கேன் செய்து பார்க்க உதவுகிறது, இரண்டும் ஏறக்குறைய ஒரே பணியை செய்தாலும், இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் தொழில்நுட்பத்திலும் கட்டணத்திலும் உள்ளது.

CT ஸ்கேன்:

COMPUTED TOMOGRAPH என்பதின் சுருக்கமே CT  ஆகும். இதை 3 பகுதிகளாக பிரிக்கலாம். முதலாவது COMPUTER அடுத்து PATIENT TABLE பிறகு GANTRY . பலர் XRAY பிலிம் - ஐ பார்த்திருப்பீர்கள், பல படங்களிலும் சிலர் வீட்டிலும் இருக்கும் கருப்பு BACKGROUND இல் எலும்புகள் தெரியும் ஒளி ஊடுருவும் படம். இந்த XRAY பிலிம் போல் பல பில்ம்களை சேர்த்தால் கிடைக்கும் ஒரு தொடர் படங்களே CT ஸ்கேன்.

CT  ஸ்கேன்

நம் திரைப்படங்களில்  அடுத்தடுத்த frame களின் தொடர்ச்சியே படமாக வரும் அதுபோல அடுத்தடுத்த XRAY பிலிம் களின் தொடர்ச்சியே CT ஸ்கேன் படமாக வருகிறது.ஆனால் FILM களில் RECORD செய்யாமல் கம்ப்யூட்டர் இல் பதிவு செய்து எடுக்கப்படுகிறது.

முதலில் PATIENT  ஐ டேபிள் இல் படுக்க வைப்பர்.

அந்த டேபிள் இன் மேல் பாகம் GANTRY எனப்படும் பெரிய வலையத்திற்குள் பொருத்தி எந்த பாகம் ஸ்கேன் செய்ய வேண்டுமோ அந்த இடத்தை POSITION செய்வர்.

GANTRY - க்கு உள்ளே ஒரு XRAY TUBE உம் DETECTOR களும் எதிர் எதிரில் இருக்கும், ஸ்கேன் ஆரம்பித்தவுடன் இவை இரண்டும் GANTRY வளையத்தில் வேகமாய் சுற்றும்.



XRAY கதிர் வீச்சை உமிழ PATIENT இன் உடலில் ஊடுருவி  DETECTOR ஐ சேரும். DETECTOR அதை கம்ப்யூட்டர் ருக்கு அனுப்பி ஒரு தெளிவான IMAGE ஐ கொடுக்கும். 

தலை, கண், மூக்கு, மூளை - CT படம்

XRAY கதிர் எலும்புகளை ஊடுருவாது அதனால் அந்த இடங்களை தவிர்த்து மற்ற இடங்கள் ஊடுருவல் அடிப்படையில் வெள்ளை கருப்பாக மாறி தெரியும்.

டிப்ஸ்:
இப்போது வளர்ந்துள்ள தொழில்நுட்பத்தால் XRAY TUBE  சுற்றும் வேகத்தை பொறுத்து SCAN செய்யும் இடமும் மாறுகிறது. வேகமாக இயங்கும் இதயத்தை கூட ஸ்கேன் செய்ய முடியும், இதன் மூலம் ரத்த குழாய் அடைப்பையும் காணலாம். சுற்றும் வேகம் கூட கூட கட்டணமும் அதிகரிக்கும்.

எச்சரிக்கை:
கதிர்வீச்சை உபயோகிப்பதால் கர்ப்பிணி பெண்கள் ஸ்கேன் செய்ய கூடாது, அங்கு வேலை செய்யும் TECHNICIAN கள் பாதுகாப்பு முறைகளை கையாள்வது அவசியம். சரியான அளவு உபயோகித்தால் இது மருத்துவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

கட்டி அல்லது வெட்டு - இவ்வாறுதான் தெரியும்

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தானே!

அடுத்த பதிவில், MRI பற்றியும் மற்றும் CT கும் MRI கும் உள்ள வித்தியாசத்தை பற்றியும் பார்போம்.

Monday, June 14, 2010

ஏன் நிறுத்த வேண்டும்?

நண்பர்களே,
தற்போது புகை பிடிப்பது வாலிப வயதில் ஒரு கட்டாய பழக்கமாக மாறி வருகிறது. நாளுக்கு நாள் புகை பிடிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் வருகிறது.விளையாட்டாக புகை விடுவதாக ஆரம்பிக்கும் பழக்கம் முதலில் நமக்கு அடிமையாக இருக்கிறது பின் போக போக அதற்க்கு அடிமையாக வேண்டிய நிலைமை வந்து விடும்.

பலர் இதன் விளைவு தெரிந்தாலும் புகை பழக்கத்தை விட முடியாமல் இருக்கின்றனர். சிலர் பயத்தால் விட்டு விடுகின்றனர்.புகை பிடிப்பதை அதனால் ஏற்படும் விளைவுகளை காணும் போது பயத்தால் விட்டுவிடுகின்றனர் ஆனால் சில நபர்களுக்கு காலம் கடந்து விடுகிறது.

தினமும் சில நேரங்களில் புகைப்பவர்கள் உதாரணமாக அலுவலக இடைவேளை,சாப்பிட பிறகு,டீ குடிக்கும் போது என பழகுபவர்கள் ஒரு நாள் அந்த நேரங்களில் புகை பிடிக்க முடியாவிட்டாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.எனவே ஆரம்பித்திலேயே புகை பிடிப்பதை நிறுத்துவது தான் சரியானது.

whyquit என்ற தளம் இதற்குரிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.புகை பிடித்தால் என்னென்ன நோய்கள் வரும் , எப்படியெல்லாம் விளைவுகள் இருக்கும் என கூறுகிறது.மேலும் எப்படி புகை பழக்கத்தை விடுவது மேலும் நிறுத்தினால் என்னென்ன நன்மைகள் வரும் என்பதை கட்டுகிறது.

நீங்கள் புகை பிடிப்பவர்களாக இருந்தால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தளம்.உங்கள் நண்பர்கள் புகை பிடிப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு காட்டுங்கள்.வலைதள சுட்டி

Tuesday, May 25, 2010

பாலியல் நோய்கள் -1

பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடு படும் போது நோய்த் தொற்றுள்ள ஒருவரிடமிருந்து நோய் இல்லாத ஒருவருக்கு தொற்றிக் கொள்ளும் நோய்களே பாலியல் தோற்று நோய்கள் எனப்படுகின்றன(sexully transmitted disease0. அதாவது பாலியல் உறவினால் தொற்றக்கூடிய நோய்கள் பாலியல் தோற்று நோய்கள் எனப்படுகின்றன.

இந்த நோய்கள் பாலியல் தொடர்புக்கு அப்பால் வேறு முறைகள் மூலமும் தொற்றிக் கொள்ளலாம்.

பாலியல் தொற்று நோய்கள் கடத்தப் படக்கூடிய முறைகள்....

தொற்று அடைந்த ஒருவருடன் பாதுகாப்பு அற்ற முறையில் உறவில் ஈடுபடுதல்
தொற்று அடைந்த ஒருவரின் குருதியை பாய்ச்சும் போது
தொற்றுள்ள ஒருவருக்கு பயன் படுத்திய ஊசியை கிருமியழிக்காது மற்றவர்கள் பாவித்தல்
பச்சை குத்துதல்
அக்குபங்க்ச்சர் முறையில் ஊசியை கிருமியழிக்காது பயன் படுத்துதல்
தாய்ப்பாலின் ஊடாக
கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு இரத்தம் மூலமாக

பொதுவான அனைத்து முறைகளையும் மேலே கூறியுள்ளேன் . எல்லா நோய்களும் எல்லா விதமாகவும் கடத்தப் படுவதில்லை.

இலங்கை ,இந்தியா போன்ற நாடுகளில் பொதுவாக காணப்படும் பாலியல் தொற்று நோய்கள்...

  1. கொனேரியா(gonorrhoea)
  2. சிபிலிசு(syphilis)
  3. பாலுறுப்பு ஹேர்பீஸ்(Genital Herpes)
  4. பாலுறுப்பு உண்ணிகள்(Genital Warts)
  5. கிளமிடியா(Clamydia)
  6. எயிட்ஸ்(Aids)
  7. ஈரல் அழற்சி B(hepatitis B)
     


எந்த விதமான செய்கைகளில் ஈடுபடுவோருக்கு இந்த நோய்கள் தொற்றுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.
,
  1. ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் துணையை

    கொண்டவர்கள்
  2. விபச்சாரத்தொடர்பில் ஈடுபடுவோர்
  3. ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோர்
  4. ஊசி மூலம் போதைப் பொருளை பாவிப்பவர்கள்
  5. பாலுறுப்புக்களில் காயம் உள்ளவர்களோடு உறவில் ஈடுபடுதல்
இந்த நோய்களின் குணங்குறிகள் பெரும்பாலும் பாலுறுப்பு பிரதேசத்திலேயே ஏற்பட்டாலும், சில நோய்களின் குனக்குரிகள் வேறு விதமாகவும் , வேறு இடங்களிலும் வெளிக்காட்டப் படலாம்.

சில பேரில் இந்த நோய்கள் நீண்ட காலத்திற்கு அறிகுறிகளை வெளிக்காட்டாமல் இருந்துகொண்டு , அவர்களோடு உறவில் ஈடுபடுவோருக்கு தொற்றுக்களை ஏற்படுத்தலாம்.

பாலியல் தொற்றாக இருக்கக் கூடிய சில குணங்குறிகள்!

  1. பாலுறுப்பு பிரதேசத்தில் கொப்புளங்கள் தோன்றுதல்
  2. பாலுறுப்பு பிரதேசத்தில் காயங்கள் ஏற்படுதல்
  3. பிறப்பு வழியின் ஊடாக சீழ் வெளியேறுதல்
  4. சிறுநீர் கழிக்கும் பொது எரிவு அல்லது வலி ஏற்படுதல்
  5. உடலுறவின் போது வலி ஏற்படுதல்
  6. அடிவயிற்று நோவு
  7. பாலுறுப்பு பிரதேசத்தில் அரிப்பு(கடி) ஏற்படுதல்
  8. பாலுறுப்பு பிரதேசத்தில் உண்ணிகள் வளருதல்
  9. விதைப் பைகளில் வீக்கமும் நோவும்

மேலே உள்ள அறிகுறிகள் வெறுமனே பாலியல் சம்பந்தமான நோய்களில் மட்டும் ஏற்படுவதில்லை வேறு பல நோயகளிலும் இந்த அறிகுறிகள் ஏற்படலாம். ஆகவே மேற்சொன்ன அறிகுறிகள் ஏதாவது ஏற்பட்டால உடனேயே அது ஒரு பாலியல் நோய் என்ற முடிவுக்கு வந்துவிடவேண்டாம்.
தகுதியான வைத்திய ஆலோசனை பெற்று சரியான வைத்தியத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

மேலே சொல்லப்பட்ட பொதுவான் பாலியல் நோய்களைலே எயிட்ஸ் மற்றும் ஈரல் அழற்சி தவிர்ந்த ஏனைய அனைத்து நோய்களையும் பூரணமாக சுகமாக்குவதற்கான மருந்துகள் உள்ளதால் உங்களுக்கும் சந்தேகம் இருந்தால் உடனடியாக வைத்திய ஆலோசனை பெற்று உங்களை சுகமாக்கி  கொள்ளுங்கள்.

பி கு- அடுத்து வரும் இடுகைகளில் தொடர்ச்சியாக ஒவ்வொரு பாலியல் நோயாக விளக்கவிருக்கிறேன்!
            ஒவ்வொரு நோய் சம்பந்தமான படங்கள் இடுவது (பாலியல் உறுப்பின்) பற்றி உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
            மறக்காமல் உங்கள் வாக்குகளை தமிழ் மனத்திலும் ,தமிளிஷிலும் அளித்துச் செல்லுங்கள்.



நன்றி : தமிழ் மருத்துவம்

பாலியல் நோய்கள் 2 (பொது இடத்தில் தவிர்க்கவும் )

பாலியல் தொற்று நோய்கள் சம்பந்தமான அடிப்படை விளக்கங்களை முந்திய இந்த இடுகையில் பார்த்தோம்.இனி ஒவ்வொரு பாலியல் தொற்று நோய்கள் பற்றியும் சற்று விளக்கமாக பார்ப்போம்.

கொனோரியா(Gonorrhea)

இது நிஸ்சோரியா கொனோரியா(Nisseria gonorrhea) எனப்படும் பாக்டீரியாவினால் ஏற்படும் நோயாகும். தொற்று ஏற்பட்டு .. தொடக்கம் .. நாட்களில் இந்த நோய் வெளிக்காட்டப்படும்.

இது ஆண் பெண் என இரு பாலாரையும் பாதித்தாலும் பிரதானமாக் குணங்குறிகளை வெளிக்காட்டுவது ஆணில் ஆகும்.


ஆண்களில் ஏற்படும் அறிகுறிகள்.

  1. ஆண் உறுப்பில் இருந்து மஞ்சள் நிறப் பாயம் வெளிவருதல்
  2. சிறுநீர் கழிக்கும் போது எரிவு அல்லது வலி ஏற்படுதல்
  3. அடிக்கடி சிறு நீர் கழிக்க வேண்டி ஏற்படுதல்









பெண்களிலே ஏற்படும் அறிகுறிகள்

பெண்களின் கருப்பைக் கழுத்துப் பகுதியே தொற்றுக்கு உள்ளாகும்.
அநேகமான பெண்களில் நோய் தோற்றி இருந்தாலும் அதன் அறிகுறிகள் வெளிக்காட்டப்படுவதில்லை.


சில பெண்களில் சில அறிகுறிகள் ஏற்படலாம். அவையாவன.

  1. பிறப்புறுப்பின் ஊடாக மஞ்சள் நிறப் பாயம் வெளிவருதல்
  2. சிறுநீர் கழிக்கும் போது எரிவு அல்லது வலி ஏற்படுதல்
  3. அடிக்கடி சிறு நீர் கழிக்க வேண்டி ஏற்படுதல்
  4. மாதவிடாய் ஒழுங்கின்றி நடைபெறுதல்
  5. அடிவயிற்றில் நோவு ஏற்படுதல்



இது தவிர வாய் வழி புணர்ச்சியில் ஈடுபடுவோருக்கு தொண்டைக் கரகரப்பும் , தொண்டையில் தோற்றும் ஏற்படும்.

குதவழிப் புணர்ச்சியில் ஈடுபடுவோருக்கு குடல் தொற்று ஏற்படலாம்.

கர்ப்ப காலத்திலேயே இந்த நோய் ஏற்படுமானால் பிறக்கின்ற குழந்தையின் கண்களிலே தொற்றுக்கள் ஏற்படலாம். இவ்வாறு கண்களிலே தொற்று ஏற்பட்ட குழன்ற்ஹைகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்காவிட்டால் பார்வை நிரந்திரமாக பாதிக்கப்படலாம்.



                       
நோயுள்ள தாய்க்கு பிறந்த குழந்தை
 

இந்த நோயினை குணப்படுத்துவதற்கான மருந்துகள் இப்போது எல்லா இடங்களிலேயும் கிடைக்கின்றன. அவை சில நாட்களுக்கே பாவிக்கப்படவும் வேண்டும்.
ஆகவே மேலே சொன்ன அறிகுறிகள் ஏதாவது ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரைச் சந்தித்து மருந்துகளைப் பெற்றுக் கொள்ளுங்க
நன்றி : தமிழ் மருத்துவம்

ஆண்களுக்கான கர்ப்பத்தடை (வீடியோவுடன்)

முன்னைய இந்தப் பதிவிலே பெண்களுக்கு எப்படி கருத்தடை செய்யப்படுகிறது என்று விளக்கி இருந்தேன். பெண்களிலே செய்யப்படும் கருத்தடை சத்திர சிகிச்சையானது அந்தப் பெண்ணை முற்று முழுதாக மயக்கி , ஒரு சத்திர சிகிச்சை கூடத்திலே செய்யப்படும் ஒரு சத்திர சிகிச்சையாகும். இதனால் அந்தப் பெண்ணுக்கு பல பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன.
உதாரணமாக மயக்க மருந்தினால் ஏற்படும் பாதிப்பு , வயிற்றை வெட்டி செய்யும் சத்திர சிகிச்சை என்பதால் தொற்றுக்கள் , இரத்தப் போக்குகள் என்பவை ஏற்படவும் சாத்தியம் உள்ளது.

ஆனால் இந்த பாதிப்புகள் மிகவும் குறைந்த முறையில் ஆண்களிலே மிகவும் இலகுவாக கருத்தடை சத்திர சிகிச்சை செய்யப் படலாம்.

ஆண்களிலே செய்யப்படும் கருத்தடை சத்திர சிகிச்சையானது Vasectomy எனப்படுகிறது.

பெண்களிலே நடைபெறும் சத்திர சிகிச்சையில் முட்டை கருப்பை நோக்கி நகரும் பலோப்பியன்(fallopian) குழாய் வெட்டித் தைக்கப்படும்.
ஆண்களிலே கூட அதற்கு நிகராக விந்துகள் பயணிக்கும் குழாயான Vas deferens எனப்படும் குழாய் வெட்டித்தைக்கப்படும்.

பெண்களிலே பலோப்பியன் குழாய் வயிற்றின் உள்ளே இருப்பதால் வயிற்றை வெட்டியே இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப் படவேண்டும்.

ஆனால் ஆண்களிலே இந்த குழாயானது விதைப்பையினுள் ஆரம்பித்து வயிற்றின் அடிப்ப்குதயின் ஊடாக ஆணுறுப்பை அடைந்து விந்துகளை வெளியேற்றும்.

இவ்வாறு இந்தக் குழாய் விதைப் பையினுள் இருப்பதால் இலகுவாக விதைப் பையில் சிறிய துளை போட்டு அந்தக் குழாய்களை வெட்டித் தைத்துவிடுவதன் மூலம் விந்துகள் வெளியேறுவது தடைப்பட்டு கர்ப்பம் உருவாகுவது தடைப்படும்.

இதற்காக எந்த மயக்க மருந்துகளும் தேவை இல்லை , சத்திர சிகிச்சை கூடமும் தேவை இல்லை.

வெறுமனே வெட்டப்படும் இடத்தை மட்டும் விறைக்கச் செய்யும் மருந்துகளை பாவித்து சத்திர சிகிச்சை கூடம் இல்லாத வைத்திய சாலைகளில் கூட இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப் படலாம்.

இதற்காக வெட்டப் படும் துளையும் மிகவும் சிறிய(ஒரு சில cm)  காயமே.

இந்த சத்திர சிகிச்சை செய்த பின்பு தடைப்படுவது விந்துகளின் வெளியேற்றம் மட்டுமே . ஆனால் ஒரு ஆண் உறவில் ஈடுபடும்   போது வெளிவரும் சுக்கிலப் பாயத்தில் இருக்கும் ஏனைய திரவங்கள் வழமை போல் வெளிவருவதால் அந்த ஆணின் ஆண்மையிலோ அல்லது, உடலுறவின் மீதான ஆர்வத்திலோ எந்த விதமான மாற்றமும் ஏற்படாது.

இந்தச் சத்திர சிகிச்சை செய்து கொள்ளுவதால் ஆண்மை குறையும் என்ற மூட நம்பிக்கையே ஆண்கள் கர்ப்பத்தடை செய்யாமல் பெண்கள் மட்டும் கர்ப்பத்தடை செய்து கொள்ளும் அவலம் எம் சமூகத்தில் இருப்பதற்கானகாரணமாகும்.


ஆண்களே கொஞ்சம் சிந்தியுங்கள் ! மிகவும் எளிமையாக எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் நீங்கள் கருத்தடை செய்யும் வசதி இருக்கும் போது என் உங்கள் மனைவியை மிகவும் சிக்கலான சத்திரசிகிச்சைக்கு உட் படுத்துகிறீர்கள். 
நீங்கள் உங்கள் மனைவியை உண்மையில் நேசிப்பவர் என்றால் நீங்களே கர்ப்பத்தடை சத்திர சிகிச்சை செய்து கொள்ளுங்கள்.


      
    எவ்வளவு இலகுவாக இந்த சத்திர சிகிச்சை நடைபெறுகிறது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள் !
நன்றி : தமிழ் மருத்துவம்

உலகத்திலேயே அதிக இறப்புக்களுக்கு காரணமாக இருக்கும் முதல் பத்து இடத்திலே இருக்கும் நோய்களின் பட்டியல்.


1.மாரடைப்பு  (Coronary heart disease)


2.மூளையின் இரத்தக் கசிவுகள் / பாரிசவாதம் (Stroke and other cerebrovascular diseases)

3.சுவாசப் பைத் தொற்றுக்கள் /நியுமோனியா (Lower respiratory infections)

4.சுவாசப்பை அடைப்பு நோய் (Chronic obstructive pulmonary disease)

5.வயிற்றோட்டம் (Diarrhoeal diseases)

6.HIV/AIDS

7.காச நோய் (Tuberculosis)

8.சுவாசப்பை புற்று நோய்கள் (Trachea, bronchus, lung cancers)

9.வீதி விபத்துக்கள் (Road traffic accidents)

10.முதிர்ச்சியடையாத குழந்தைகளின் பிறப்பு /நிறை குறைவான குழந்தைகளின் பிறப்பு (Prematurity and low birth weight)

இவற்றிலே மாரடைப்பு, மூளையின் இரத்தக் கசிவுகள் / பாரிசவாதம் ,  சுவாசப்பை அடைப்பு நோய், காச நோய், சுவாசப்பை புற்று நோய்கள் போன்றவற்றிற்கு முக்கிய காரணமாக இருப்பது புகைப் பிடித்தல்.
 நன்றி : தமிழ் மருத்துவம்

எளிய மருத்துவக் குறிப்புகள்

 1) பொன்மேனி தரும் குப்பைமேனி:
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.

2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு:
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

3) வயிற்றுவலி போக்கும் நறுவலி:
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.

4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை:
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.

5) தலைபாரம் நீக்கும் கிராம்பு:
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6) காயத்துக்கு காட்டாமணக்கு:
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.

7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி:
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.

8) குழந்தையை காப்பான் கரிப்பான்:
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

9) கடலையும் அடிதடியும்:
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

10) மயக்கத்துக்கு ஏலம்:
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.

12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு:
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

13) மயிர்கறுக்க மருதோன்றி:
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

14) வாந்தி நீக்கும் நெல்லி:
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

15) படர்தாமரைக்கு:
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு:
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

17) மலச்சிக்கலுக்கு:
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

18) மூலம் அகல:
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

19) முகப்பொலிவிற்கு:
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு:
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்:
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

22) தாய்ப்பால் சுரக்க கீரை:
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.

23) அரையாப்பு தீர:
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை:
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.

25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்:
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.

26) பசி உண்டாக:
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

27) இருமலுக்கு தேனூறல்:
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.

28) வெள்ளை தீர்க்கும் புங்கன்:
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.

29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு:
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.

30) துத்தி டீ:
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.

31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி:
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.

32) நீர்த்துவார எரிவு தீர:
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.

33) அஜீரண பேதிக்கு:
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.

34) உடல் இளைத்தவருக்கு:
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

35) இரத்த கடுப்புக்கு:
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.

36) வெளுத்த மயிர் கறுக்க:
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.

37) தொண்டை கம்மல் தீர:
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

38) வண்டுகடிக்கு:
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

39) சூட்டுக்குத் தைலம்:
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

40) கிருமிகள் விழ:
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.

41) மூலம் தீர்க்கும் ஆவாரை:
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

42) மூலத்திற்கு வேது:
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.

43) ஈளை தீர்க்கும் இம்பூரல்:
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.

44) கைநடுக்கம் தீர:
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

45) இருமல் தீர:
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

46) காதில் சீழ் வருதல் தீர:
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.

47) தொண்டை புண்ணிற்கு:
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.

48) தலைவலிக்கு:
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

49) சீதபேதிக்கு:
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.

50) யானைக்கால் வீக்கம் வடிய:
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.

51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு:
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.

52) புண்கள் ஆற:
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.

53) முடி உதிர்வதை தவிர்க்க:
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

54) கட்டிகள் உடைய:
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.

55) அண்ட வாத கட்டு:
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.

56) கண் பூ குணமாக:
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.

57) இரத்த மூத்திரத்திற்கு:
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.

58) இரத்த மூலம் குணமாக:
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

59) அசீரணம் குணமாக:
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

60) வேர்க்குரு நீங்க:
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

61) தேக ஊறலுக்கு:
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.

62) சூட்டிருமலுக்கு:
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.

63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு:
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.

64) நீர்க்கடுப்பு எரிவு தீர:
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்

65) சகல விஷத்திற்கும்:
நசியம்குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.

66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க:
சூரணம்கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.

67) பால் உண்டாக:
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.

68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு:
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.

69) உடல் வலுவுண்டாக:
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.

70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி:
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.

71) தேமல் மறைய:
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

72) வாயு கலைய:
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.

73) பாலுண்ணி மறைய:
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

74) தொண்டை நோய்க்கு:
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.

75) பெளத்திரம் நீங்க:
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.

76) தீச்சுட்ட புண்களுக்கு:
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.

77) தேக பலமுண்டாக:
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.

78) படைகளுக்கு:
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.

79) கண்ணோய் தீர:
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.

80) கற்றாழை நாற்றத்திற்கு:
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.

81) சேற்று புண்ணிற்கு:
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.

82) நகச்சுற்று குணமாக:
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.

83) முகப்பரு குணமாக:
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.

84) புழுவெட்டு குணமாக:
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.

85) பொடுகு குணமாக:
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.

86) தழும்பு மறைய:
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.

87) முறித்த எலும்புகள் கூட:
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.

88) பால் சுரக்க:
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.

89) தண்ணீர் தெளிய:
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.

90) கண் நீர் கோர்த்தல் தணிய:
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.

91) புகையிலை நஞ்சுக்கு:
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.

92) குடிவெறியின் பற்று நீங்க:
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

93) நீரிழிவு நீங்க:
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.

94) பெரும்பாடு தணிய:
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.

95) நரம்பு தளர்ச்சி நீங்க:
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி நீங்கும்.

96) வீக்கத்திற்கு ஒற்றடம்:
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.

97) மூட்டுப் பூச்சிகள் அகல:
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.

Thursday, May 20, 2010

தினமும் மீன் எண்ணெய் மாத்திரை எடுத்துக் கொண்டால் மாரடைப்பு வராது

மீன் எண்ணெய் என்பது Omega3 Fatty Acid மருந்து வகை மாத்திரை. கிரீன்லாந்து, ஐஸ்லாந்து போன்ற பகுதிகளில் வாழும் மனிதர்களுக்கு மாரடைப்பு போன்ற நோய்கள் வருவது இல்லை என்ற அடிப்படையில், இம்மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. அப்பிரதேச மக்கள் காலை, மதியம், இரவு என எல்லா நேரத்திலும் மீன் அல்லது மீன்சார்ந்த உணவையே உண்கின்றனர். எனவே இந்த பாதுகாப்பு இருப்பதாக கூறுகின்றனர்.
இந்த Omega3 என்ற மாத்திரை E P A மற்றும் D H A மருந்துகளை கொண்டது. இந்த உணவு சார்ந்த மருந்தை தினமும் உட்கொண்டால் ரத்தநாளத்தின் உட்சுவர்கள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் 'டிரைகிளிசரைட்ஸ்' என்னும் கெட்ட கொழுப்பை குறைக்கிறது. H D L என்ற நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் செய்கிறது. ஆனால் L D L என்ற கெட்ட கொழுப்பு அளவு குறைவதில்லை என்றும் தெரிய வந்துள்ளது. இந்த வகை மருந்துகள் ரத்தக் குழாய் நோய்களை மட்டுமின்றி, ஹார்ட் பெயிலியர், இருதய மின்னோட்ட குறைபாடுகளையும் சரிசெய்கிறது. எனவே இந்த வகை மருந்து இருதயத்திற்கு பல வகை நன்மைகளை தருவது உண்மையே

கீரையும் அதன் மருத்துவக்குணங்களும்

ஏழைகளின் சொத்து என்று சொல்லப்படும் கீரைவிலை மலிவான சாதாரணப்பொருட்களிலும்நிறையப்பலன்கள் பெறமுடியும் என்பதற்கு ஓர்எடுத்துக்காட்டாகும். சில முக்கியகீரைகளின்பலன்கள் பின்வருமாறு:அரைக்கீரை: தினமும் உண்ணக்கூடியகீரைவகைகளில் இது முதன்மையானது. எல்லாநோயாளிகளும் உண்ணக்கூடியது.கண் பார்வைச்சிறப்பாகவைத்திருபதற்கு இந்தக்கீரைபயன்படுகிறது.இரத்தநாளங்கள், ஜீரண உறுப்புகளை நல்லநிலையில் பாதுகாப்பாகவைத்திருக்க இது ஒரு சிறந்தகீரை. பிரசவமானமகளிருக்கு உடனடியான் ஊட்டம் அளிக்கும்வல்லமை இந்தக்கீரைக்கு இருக்கிறது.மணத்தக்காளிக்கீரை: வாயில் ஏற்பட்ட புண்,வயிற்றுப்புண் முதலியவற்றிக்கு கண்கண்டசஞ்சீவி என்று இக்கிரையைக்கூறுவார்கள்.மூலநோய், குடல் அழற்சி கட்டுப்படும். குரல்வளம் பெருகும். அல்சர் என்கின்ற நோய்க்குஅற்புத மருந்தாகும். வாரம் இரு முறை உண்ணக்கூடியகீரைகளில் இதுவும் ஒன்று.பசளைக்கீரை: மலச்சிக்கலை விரட்டுவதில்வல்லது.ஆண்மையைப்பலப்படுத்தும் , குளிர்ச்சிதரும் கீரைகளில் இதுவும் ஒன்று. ஆனால்ஆஸ்துமா போன்றநொய் உள்ளவர்கள் இக்கீரையைக்கோடை காலத்தில் மட்டுமேஉண்ணவும்.வெந்தியக்கீரை: இதில் புரதம், தாதுக்கள்,மற்றும் விட்டமின் சி முதலியன் அபரிதமாக இருக்கிறது.வாயுவைக்கண்டிக்கும்கல்லீரலைச்சுறுசுறுப்பாக்கும். வாரம்ஒருமுறை இக்கீரையை உண்டுவரமூட்டுவலி,இடுப்புவலி போன்றவைநீங்கும்.சிறுநீர்கோளாறு கிட்டவே வராது.முளைக்கீரை: இக்கீரை எல்லா வயதினரும்தினம் சாப்பிடக்கூடியது. பசி இல்லாதவற்குபசியைத்தூண்டக்கூடிய கீரை. காசநோயின்போதுவரும் காச்சலைக்கட்டுப்படுத்தக்கூடியது.அகத்திக்கீரை: இதில் வைட்டமின், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து நிறைந்தது. விஷங்களை முறிக்கும். கண் பார்வை சம்பந்தப்பட்டநரம்புகளுக்கு வலுவூட்டக்கூடியது. வயிற்றில்உள்ளகிருமிகளைக் கொல்லக்கூடியது. ஆனால்வயிற்றுக்கோளாறு உள்ளவர்கள் வயோதிகர்உண்ணக்கூடாது. மாதத்தில் ஒரு முறை மட்டும்உண்ணத்தக்கது.கரிசலாங்கண்ணி கீரை: இக்கீரை முதுமைத்தோற்றத்தைக்கட்டுப்படுத்தும். கண் பார்வை கூர்மையடையும்.பல் நோய்கள் வராமல் தடுக்கக்கூடியது.இரைப்பையை வலுப்படுத்துவதில் சிறந்தது.

சிறுநீரகங்களுக்கு ஓய்வளிக்காதீர்கள்!

உட‌லி‌ன் மிக மு‌க்‌கியமான பாக‌ங்‌ளி‌ல் சிறு‌நீரக‌ங்களு‌ம் ஒ‌ன்று. உட‌லி‌ல் வ‌யி‌ற்‌றி‌ன் அடி‌ப்பகு‌தி‌யி‌ல் அவரை விதை வடிவ‌த்‌தி‌ல் இரு‌ப்பதுதா‌ன் சிறு‌நீரகம. இதனை ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல் கி‌ட்‌னி எ‌ன்‌கிறோ‌ம்.

இடுப்புக்கு மேலே விலா எலும்புக் கூண்டுக்குள் இரு பக்கமும் இருப்பதுதான் சிறுநீரகம். ஒரு ம‌னித சிறு‌‌நீரக‌த்‌தி‌ன் சராச‌ரி எடை 150 கிராம். 12 செ.மீ. நீளம் 5 செ.மீ. அகலம் கொ‌ண்டதாக ஒ‌வ்வொரு சிறு‌‌நீரகமு‌ம் இரு‌க்கு‌ம். . சிறுநீரகத்தைப் பொருத்தவரை அதன் அளவு‌ம் மிகவு‌ம் மு‌க்‌கியமாக‌க் கருத‌ப்படு‌கிறது. ஏதாவதொரு காரணத்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும் நிலையில்தான் அதன் அளவும் குறையவோ அல்லது கூடவோ செய்கிறது.
சிறு‌நீரக‌த்‌தி‌ன் செய‌ல்களை எ‌ண்‌ணி‌ப் பா‌ர்‌த்தோமானா‌ல் நம‌க்கு இறைவ‌னி‌ன் மீது நி‌ச்சய‌ம் ஒரு ம‌தி‌ப்பு வரு‌ம். அ‌ந்த அள‌வி‌ற்கு சிறு‌நீரக‌த்‌தி‌ன் ப‌ணி அமை‌ந்து‌ள்ளது.
உட‌லி‌ல் ப‌ல்வேறு நடவடி‌க்கைகளை கவ‌னி‌க்‌கிறது இ‌ந்த சிறு‌நீரக‌ங்க‌ள். பொதுவாக ஒரு ம‌னிதனு‌க்கு இர‌ண்டு சிறு‌நீரக‌ங்க‌ள் இரு‌க்கு‌ம். ஆனா‌ல் ஒரு ம‌னித‌ன் வாழ ஒரு சிறு‌நீரகமே போதுமானதாக‌க் கருத‌ப்படு‌கிறது.
உட‌லி‌ல் உ‌ள்ள ர‌த்த‌த்தை வ‌டிக‌ட்டி அ‌தி‌ல் உ‌ள்ள க‌ழிவுகளை சிறு‌நீராக வெ‌ளியே‌ற்று‌கிறது. உடலுக்கு‌த் தேவையான நீ‌ர்‌ச்ச‌த்து சம அள‌வி‌ல் இரு‌க்கவு‌ம் உதவு‌கிறது. ர‌த்த அழு‌த்த‌த்தை‌க் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல் வை‌க்‌கிறது. உட‌லி‌ல் அ‌மில - கார‌த் த‌ன்மையை சம‌நிலை‌யி‌ல் வை‌க்‌கிறது.
இதும‌ட்டும‌ல்‌ல், உட‌லி‌ல் சிவ‌ப்பணு‌க்க‌ள் உ‌ற்ப‌த்‌தி‌க்கு‌ம் உத‌வி செ‌ய்‌கிறது. அதாவது, உட‌லி‌ல் சிவ‌ப்பணு‌க்க‌ள் உ‌ற்ப‌த்‌தி‌க்கு உதவு‌ம் எ‌த்தோபா‌ய்‌ட்டி‌ன் எ‌ன்ற ஹா‌ர்மோனை சிறு‌நீர‌க‌ம் சுர‌க்‌கிறது. இ‌ந்த ஹா‌ர்மோ‌ன் சுர‌ப்‌பி‌ல் குறை ஏ‌ற்படு‌ம் போதுதா‌ன் ர‌த்த சோகை எ‌ன்ற வியா‌தி ஏ‌ற்படு‌கிறது.

இ‌ப்படி சிறு‌நீரக‌த்‌தி‌ன் ப‌ணிகளை அடு‌க்‌கி‌க் கொ‌ண்டே போகலா‌ம். இவை ம‌ட்டு‌ம் வேலை செ‌ய்யாம‌ல் போனா‌ல் உட‌ல்‌நிலை எ‌‌வ்வாறு பா‌தி‌க்கு‌ம் எ‌ன்பதை வா‌ர்‌த்தைகளா‌ல் விவ‌ரி‌க்க முடியாது.
ர‌த்த‌ம் சு‌த்‌திக‌ரி‌க்க‌ப்படாம‌ல் அ‌ப்படியே உட‌ல் முழுவது‌ம் பரவு‌ம். ர‌த்த‌த்‌தி‌ல் தேவைய‌ற்ற உ‌ப்பு, தாது‌ப் பொரு‌ட்க‌ள் த‌ங்‌கி‌விடு‌ம். இதனா‌ல் கை, கா‌ல்க‌‌ளி‌ல் வீ‌க்க‌ம் ஏ‌ற்படு‌ம். ர‌த்த சிவ‌ப்பணு‌க்க‌ளி‌ன் உ‌ற்ப‌த்‌தி பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு ர‌த்த சோகை ஏ‌ற்படு‌ம். இ‌ந்த நிலை தொட‌ர்‌ந்து நீடி‌த்தா‌ல் உட‌ல் சம‌ச்‌சீ‌ர் நிலையை இழ‌ந்து மரண‌ம் ஏ‌ற்படு‌ம்.
இ‌ப்படி நாளெ‌ல்லா‌ம் நம‌க்காக பாடுபடு‌ம் சிறு‌நீரக‌ம் சீராக செய‌ல்பட வே‌ண்டு‌ம் எ‌னி‌ல் நா‌ம் செ‌ய்ய வே‌ண்டியது எ‌ன்ன? தினமு‌ம் உடலு‌க்கு‌த் தேவையான நீரை அரு‌ந்‌தி வர வ‌ே‌ண்டு‌ம். உடலு‌க்கு‌த் தேவையான நீரை நா‌ம் அரு‌ந்து‌ம் போது சிறு‌நீரக‌த்‌தி‌ன் வேலை எ‌ளிதா‌கிறது.
தினமு‌ம் உடலு‌க்கு‌த் தேவையான அளவு‌க்கு‌க் குறைவாக நீ‌ர் அரு‌ந்துவதாலோ, நீ‌ர் அரு‌ந்தாம‌ல் இரு‌ப்பதாலோ சிறு‌நீரக‌த்‌தி‌ற்கு ஓ‌ய்வு அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று எ‌ண்‌ணினா‌ல் அது விரை‌வி‌ல் நிர‌ந்தர ஓ‌ய்வை எடு‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் எ‌ன்பதை நினை‌வி‌ல் கொ‌ள்ளு‌ங்க‌ள்.
வரு‌ம் கோடை‌க் கால‌த்‌தி‌ல் சிறு‌நீரக‌ங்களு‌க்கு அ‌திக சி‌க்கலை ஏ‌ற்படு‌த்தாம‌ல், தேவையான அளவு த‌ண்‌ணீரை அ‌வ்வ‌ப்போது குடி‌த்து வாரு‌ங்க‌்‌ள். அதுதா‌ன் சிறு‌நீரக‌த்‌தி‌ற்கு நா‌ம் செ‌ய்யு‌ம் உத‌வியாக இரு‌க்கு‌ம்.

சிசேரியன் பிரசவத்தால் சீரழியும் பெண்கள் சில அதிர்ச்சித் தகவல்கள் !!!

இந்த உலகத்தில் மிகவும் புனிதமான ஒரு இடம் உள்ளது என்றால் அது தாயின் கருவரை என்றுதான் நான் சொல்வேன் . ஆனால் அந்த புனிதத் தளத்திலும் இன்றய நிலையில் இயற்கைக்கு மாறாக பல கலவரங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன . இந்த உலகத்தை கடவுள் படைத்தாரா என்பது எனக்கு தெரியாது ஆனால் என்னை என் தாய்தான் படைத்தாள் என்பதை நான் நான்கு அறிவேன் . நம்புகிறேன் கடவுள் இருக்கிறது ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொரு அன்னையின் உருவதிலும் , பிறருக்கு உதவும் மனம் கொண்ட நல்ல மனிதர்கள் உருவதிலும் , சரி இனி நம்ம விசயத்திற்கு வருவோம் .

விஞ்ஞானம் இவ்வளவு வளர்ந்த பின்னும் நமக்கு கர்ப்ப காலம் பற்றிய முழுமையான அறிவு இல்ல .
இயற்கையான முறையில் கரு உருவாகி ஆரோக்கியமாக வளர்ந்து பிரசவ நேரத்தில் ஏற்படும் ஒரு சில பிரச்சினைகளினால் சிசேரியன் செய்யப்பட்டு குழந்தை பிரசவிக்கும் நிலை தற்போது அதிகரித்துள்ளது.
இதற்கு தா‌யி‌ன் சில பல உடல் அமைப்புகள்தான் காரணமாகின்றன.

ஒரு கர்ப்பிணியை, எல்லா பரிசோதனைகளும் செய்து அவருக்கு சுகப் பிரசவம் ஆகும் என்று மருத்துவர்கள் தீர்மானித்து பிரசவ அறைக்கு கொண்டு சென்று கடைசி நேரத்தில் கூட சிசேரியனுக்கு பரிந்துரை செய்யும் நிலை உள்ளது.

(இவை அனை‌த்து‌ம் இய‌ற்கையாக சிசே‌ரிய‌ன் செ‌ய்யு‌ம் நிலையை‌ப் ப‌ற்‌றிய விஷய‌ங்க‌ள் ம‌ட்டுமே. பண‌ம் ப‌றி‌ப்பத‌ற்காக த‌னியா‌ர் மரு‌த்துவமனைக‌ளி‌ல் செ‌ய்ய‌ப்படு‌ம் சிசே‌ரிய‌ன்க‌ள் அ‌ல்ல. தனியார் மருத்துவமனைகளில் சுகப்பிரசவம் என்பது ஆச்சரியமான நிகழ்ச்சிதான்.)

புகழ் பெற்ற ரோமாபுரி தளபதி ஜூலியஸ் சீஸர் , இவர்தான் உலகத்திலே முதல் முதலில் வயிற்றை கிழித்து எடுக்கப் பட்டக் முதல் குழந்தை !


எனவே , அவரது பெயரையே இம்முறைக்கு வைத்துவிட்டார்களாம் ! ஒரு விஷயம் தெரியுமா ? சிசேரியனில் பிறக்கும் குழந்தை நார்மல் பிரசவத்தில் பிறக்கும் குழந்தையைக் காட்டிலும் , புத்திசாலியாக இருக்கிறதாம் ! அதேநேரம் , நார்மல் முறையில் பிறக்கும் குழந்தை தனது தாய் - தந்தையிடம் காட்டும் அன்பு பரிவு பாசத்தைவிட சிசேரியனில் பிறக்கும் குழந்தை குறைவாகவே தனது உணர்வுகளை வெளிப்படுத்துகிறது என்று சொல்கிறது ஆய்வுகள்.

உலகம் முழுதும், குறிப்பாக வளரும் நாடுகளில், சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்து வருகின்றன. உலக சுகாதார நிறுவனம் எந்த ஒரு நாட்டிலும், எக்காரணத்தைக் கொண்டும், சிசேரியன் பிரசவங்கள் 15 விழுக்காட்டிற்குமேல் இருக்கக்கூடாது என்று சொல்கிறது. ஆயினும் இந்தியா, சீனா ,பிரேசில் போன்ற நாடுகளில் இது உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடும் அளவைவிட ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதற்கான முதன்மையான காரணியாக பலரும்,
படித்தவர்கள் முதல் படிக்காத பாமரன் வரை, கருதுவது மருத்துவர்களின் பணம் கொள்ளையடிக்கும் ஆசைதான் என்பது. இது பெரிதும் உண்மைதான் என்றாலும் மேலும்

பல காரணங்களும் , குற்றச்சாட்டுகளும் நம் மீதுதான் உள்ளது என்று சொல்லவேண்டும் ..

பொதுவாக சிசேரியன் பிரசவங்கள் மகப்பேறு காலத்தில் தாய், சிசு ஆகிய இருவரின் மரணத்தைத் தவிர்ப்பதற்காகவே (Perinatal death) மேற்கொள்ளப்படவேண்டும். ஆனால் மிக அதிக சிசேரியன் பிரசவங்கள் நடைபெறும் நாடுகளில் இன்னமும் மகப்பேறு காலத் தாய், சிசு மரணங்கள் அதிகமாகவேயுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்துள்ள அளவிற்கு மகப்பேறு கால தாய், சிசு மரணங்கள் குறையவில்லை என்பதுதான் உண்மை. அப்படியானால் சிசேரியன் பிரசவங்கள் தேவையற்றமுறையில் செய்யப்படுகிறதா என்ற இயல்பான அய்யத்தை இப்புள்ளி விபரம் எழுப்புகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டில் சென்னை மருத்துவக் கல்லூரியின் உலக பொது சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் சென்னையின் தனியார் மருத்துவ மனைகளில், அரசு மருத்துவமனைகளைவிட நான்கு மடங்கு சிசேரியன் பிரசவங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவந்தது. இது மருத்துவர்களின் பணம் பண்ணும் ஆசை என்ற வாதத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக உள்ளது. அதேபோல் உலக அளவில் நடத்திய வேறு ஒரு ஆய்வில் சென்னை சென்னை உள்ள நடுத்தர, உயர் நடுத்தரக் குடும்பங்களில் சிசேரியன் பிரசவங்கள் அதிகமாக நடைபெறுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின

இதற்கு மருத்துவர்களை குறை சொல்வதில் பயன் இல்லை. பிரசவ வலி வரும்போதுதான், வலியின் தன்மையிலோ, குழந்தையின் தலை திரும்புவதிலோ, கருப்பை வாய் திருப்பதிலோ, குழந்தையின் நாடித்துடிப்பிலோ மாற்றங்கள் ஏற்பட்டு, குழந்தை, கர்ப்பப்பையின் பாதை வழியாக பயணப்படுவது தடைபடும் என்று மருத்துவர்கள் உணர்வார்கள்.


இவை அனைத்தும், அந்த கணம், பிரசவ வலி கண்டபின்புதான் கவனிக்க முடியுமேத் தவிர முன் கூட்டியே கணிக்கக் கூட முடியாது.
எனவேதான் பல சமயங்களில் பிரசவ வலி கண்ட பின்பு சுகப் பிரசவத்திற்கு கொண்டு செல்லப்படும் பெண்களுக்கு சிசேரியன் செய்ய நேரிடுகிறது.

அமெரிக்க அரசின் யுத்தவெறி எல்லையில் வந்து நின்று ரத்தப் பற்களால் சிரித்தபோது ஈராக் கர்ப்பிணி பெண்கள் அவசரமாக மருத்துவமனைகளுக்கு விரைந்து சிசேரியன் செய்து குறைமாதத்திலேயே குழந்தை பெற்றுக் கொண்டார்கள். யுத்தம் தொடங்கிவிட்டால் அப்புறம் மருத்துவ மின்சார வசதிகள் இருக்காது. 2000ம் ஆண்டு முடிந்து புதிய மில்லனியம் பிறந்தபோது தனது குழந்தையும் அந்த நேரத்தில் பிறக்கவேண்டும் என்று உலகம் முழுக்க சிசேரியன் செய்துகொண்டவர்கள் ஏராளம். ஆனால் நாமோ யுத்தமின்றி மில்லனியம் இன்றி வெளிநாடுகளின் சிசேரியன் விகிதத்தை வேகமாக எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறோம் .

சில ஆராய்ச்சிகள் இன்றைய நடுத்தரவர்க்கத் தாய்மார்கள் தாங்களாகவே முன்வந்து சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என்ற உண்மையையும் வெளிக்கொணர்ந்திருக்கின்றன.

இதற்கு முதன்மையான காரணம் பிரசவ வலியின் வேதனையை அவர்களால் தாங்கமுடியாததுதான் என்றாலும், சில தாய்மார்கள் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தனது அந்தஸ்த்திற்கான ஒரு குறியீடாகக் கொள்வதாகச் சில ஆய்வுகள் சற்று திடுக்கிட வைக்கின்றன. (அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுக் கொள்வதைப் பெருமையாக சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்).தொண்டு என்று இருந்த மருத்தவம் தொழில் என்று மாறியதால் வந்த பணத்தாசை ஒருபக்கம் .

இன்னொரு முக்கியமான விசயம் ஜோசியம் என்ற மூடநம்பிக்கையினால் விளைவது. சில குடும்பங்கள் தங்கள் ஜோசியர்களிடம் ஆலோசனை கேட்டு சிசேரியன் மூலம் இன்ன நேரத்தில் குழந்தை பிறந்தால் நல்லது என நினைத்து மகப்பேறு மருத்துவர்களிடம் சிசேரியன் பிரசவம்தான் செய்யவேண்டும் என்று வலியுறுத்துவதும் நடைபெறுவதுமுண்டு.
இதுபோன்று இன்னும் எத்தனையோ படித்த குடும்பத்தில் உள்ளவர்கள் இன்னும் மூடநம்பிக்கையில் நாகரிகம் என்ற பெயரில் தெரிந்தே இதுபோன்ற ஆபத்துக்களை தங்களுக்கு தாங்களே ஏற்படுத்திக் கொள்கிறார்கள் . நண்பர்களே ஒருவேளை உங்களிலோ அல்லது உங்களுக்கு தெரிந்த யாரேனும் இதுபோன்ற எண்ணங்களில் இருந்தாலோ அல்லது கேட்க நேர்ந்தாலோ உடனே இன்றே அவற்றை அடியுடன் நிறுத்திவிடுங்கள் . அறிவியல் வளர வளர அன்றாட வாழ்க்கைமுறை மாறுது . இன்றைய அறிவியல் வளர்ச்சி நமது வாழும் நாட்களை அதிகரிக்கப் போவதாக எண்ணி அதில் சிக்கி சீரழிந்து விட வேண்டாம் . அறிவியல் வளர்ச்சிகளை நம்மால் இயலாத செயல்களை செய்வதற்கு பயன்படுத்துங்கள் . நம்மால் இயன்ற செயல்களை அழிக்கும் வகையில் அவை அமையவேண்டாம் . அப்படி ஒருவேளை அமைந்தால் அப்பொழுது இந்த உலகத்தில் மனிதர்களாகிய நாம் முழுவதும் அழிந்து நாம் உருவாக்கிய அறிவியல் வளர்ச்சிகள் மட்டுமே மீதம் இருக்கக்கூடும் இந்த உலகத்தில். சற்று சிந்தித்து செயல்படுங்கள் . இனியாவது நாம் வாழப்போகும் இந்த சிறிது காலத்தை இயற்கையுடன் இணைந்து இனிமையாக வாழுங்கள் . இயந்திரங்களுடன் சேர்ந்து இழந்துவிட வேண்டாம் .

இந்த பதிவை வாசித்துக்கொண்டு இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் . நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னூட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னூட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .

நன்றி: தமிழ்மனம்
Related Posts with Thumbnails